பிரதமர் பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்க முற்பட்டபோது அருகிலிருந்த மரத்தின் கிளை முறிந்து வீழ்ந்தமையால் கதிர்காமத்தில் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணித்த எம்ஐ 17 ஹெலிகொப்டர் தரையிறங்குவதற்கான தளம் மாணிக்க கங்கைக்கு அருகிலேயே அமைந்திருந்தது.
ஹெலிகொப்டரின் விசிறிகளின் காற்றுக்கு அருகிலிருந்த மரத்தின் கிளையொன்று வீழ்ந்து முறிந்துள்ளது. இதனால் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
சாதாரணமாக தரையிறங்கும் தளத்திலேயே ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டதாகவும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தமையால் விமானியால் கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் விமானப்படைப் பேச்சாளர் கூறினார்.
காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காயமடைந்த பெண் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருப்பதுடன், ஆண் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும் எவருக்கும் பாரிய ஆபத்து ஏற்படவில்லையென விமானப்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment