ஜனாதிபதித் தேர்தலுக்கு பொது வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாத சூழ்நிலைக்கு ஐக்கிய தேசிய கட்சி தள்ளபட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற நிழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தலை 2019ஆம் ஆண்டு இறுதி மாதகால பகுதியில் நடத்த தேர்தல் திணைக்களத்தின் தலைவரினால் அறிவிக்கபட்டுள்ளது.
ஆனால் தற்பொழுது ஆட்சியில் இருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யும் நடவடிக்கையில் கட்சிக்குள் பாரிய பிரச்சினைகள் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச என ஒருபுறம் கூறுகிறார்கள். சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர் இல்லை என கட்சியின் உதவி தவிசாளர் ரவி கருணாநாயக்க கூறுகிறார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளர் என வேறு ஒரு குழுவினர் கூறுகிறார்கள்.
புதிய ஜனாதிபதி மேல்நாட்டில் இருந்து வரவேண்டும் என நவீன் திஷாநாயக்க குறிப்பிடுகிறார். நுவரெலியா மாவட்டத்தில் சிங்கள மக்களுடைய வாக்குகளை மாத்திரம் பெற்று பாராளுமன்றம் சென்று அமைச்சரான ஒரே பாராளுமன்ற உறுப்பினர் நான் தான் என மார்ப்பு தட்டி கொள்ளுகிறார்.
ஆனால் எங்களுக்கு தெரிந்த வரையில் நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழுகின்ற ஒரு மாவட்டம் நவீன் திஷாநாயக்க கூறுவதை போல் சிங்கள மக்களுடைய வாக்குகளை மாத்திரம் தான் பெற்றேன் என கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ளகூடியதாக இருக்கிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற வகையில் இந்நாட்டின் பலத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு ஏற்றவாறு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை நாம் தேர்ந்தேடுப்போம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மலையக நிருபர் சதீஸ்குமார்
No comments:
Post a Comment