சுகாதாரத்துறையை முன்னேற்றுவதற்கு பொருளாதாரத்தை விட அரசியல் அதிகாரம் முக்கியமானதாகும். கடந்த காலங்களில் இருந்த வெள்ளை வான் கலாசாரத்தை இல்லாமல் செய்து ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாத்துள்ளோம். இதனால் எம்மை சிலர் தவறாக விமர்சிக்கின்றனர் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட விபத்துகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிடத் தொகுதியை நேற்று (29) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அங்கு இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்களுக்கு பிரச்சினை உண்டு. இந்தப்பகுதியில் தமிழ் மக்களின் குறைகளை நீக்குவதற்கு முடியுமான முயற்சிகளை செய்து வருகிறோம். இதற்கு இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் போன்றவர்கள் உதவ வேண்டும். அவர்களுடைய ஒத்துழைப்புடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் சுகாதார அமைச்சர் பீ. தயாரத்ன, கல்முனை மாநகர சபை பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பெரியநீலாவணை, காரைதீவு நிருபர்கள்
No comments:
Post a Comment