அம்பாறை மாவட்டத்தில் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு மகஜர் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

அம்பாறை மாவட்டத்தில் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு மகஜர் கையளிப்பு

அம்பாறை மாவட்டத்தில் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை, விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி அம்பாறை மாவட்ட செயலகம் முன்பாக அமைதிப் போராட்டம் நடத்தப்பட்டதுடன். அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் நேற்றுமுன்தினம் (28) கையகப்பட்டது. 

அம்பாறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அனுசரணையுடன் மாவட்ட காணி மீட்பு பேரவை மற்றும் காணி உரிமையாளர் சங்கம் என்பன இணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. 

மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் கே.இஸ்ஸடீன் தலைமையில், காணிகளை இழந்த தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் பிரதிநிதிகள் இவ்வமைதிப் போராட்டத்திலும். மகஜர் கையளிக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டனர். 

கோரிக்கைகள் அடங்கிய மகஜருடன், மாவட்டத்தில் காணிகளை இழந்தவர்கள் தொடர்பான விடயங்கள் அடங்கிய ஆவண தொகுப்பு ஒன்றையும் மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸனிடம் இவர்கள் இதன் போது கையளித்தனர். 

அஸ்ரப் நகர், பாணம, ராகம்வெளி, சாஸ்திர வெளி, பள்ளியடிவட்டை, ஒலுவில், நுரைச்சோலை.பொத்துவில் உள்ளிட்ட பல இடங்களில் மக்களின் காணிகள் தற்போது வரை அபகரிக்கப்பட்ட நிலையில் உள்ளன. இக்காணிகளை விடுவிக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பல வருடங்களாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

படையினர் மற்றும் வனபரிபாலன திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் வசம் உள்ள காணிகளை ஜனாதிபதி விரைவில் விடுவிக்க வேண்டும் என இதன் போது கோரிக்கை விடுக்கப்பட்டது. 

மகஜரை பெற்று கொண்ட மேலதிக அரசாங்க அதிபர், மக்களின் காணி தொடர்பான கோரிக்கைகளை அரசாங்க அதிபரிடம் எடுத்துக் கூறுவதுடன், ஜனாதிபதி மற்றும் உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். 

அம்பாறை நிருபர்

No comments:

Post a Comment