புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்ததையடுத்து, குறித்த இருவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் புத்திக பத்திரண ஆகியோர் கடந்த ஜூன் 10 ஆம் திகதி பதில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அமீர் அலி மற்றும் அப்துல்லா அஹ்றூப் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றதை அடுத்து குறித்த அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனோமா கமகே - பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
லக்கி ஜயவர்தன - நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்
No comments:
Post a Comment