மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
இன்று (05) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
ரஜித கீர்த்தி தென்னகோன் - மத்திய மாகாண ஆளுநர்
மைத்ரி குணரத்ன - ஊவா மாகாண ஆளுநர்
ஹேமால் குணசேகர - தென் மாகாண ஆளுநர்
இந்நிலையில் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, கடந்த சனிக்கிமை தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார். இவர் கடந்த ஜனவரி மாதம் மத்திய மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார்.
இதற்கு முன்னதாக ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இந்த வரிசையில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோனும் நேற்று தனது (04) பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment