முன்னாள் அமைச்சரான சாலிந்த திஸாநாயக்க இன்று (05) காலமானார்.
குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் (UPFA) பாராளுமன்ற உறுப்பினரான அவர், நோய்வாய்ப்பட்டு கடந்த சில நாட்களாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (05) பிற்பகல் காலமானார்.
1958 ஆம் ஆண்டு மே 01 ஆம் திகதி குருணாகலில் பிறந்த அவர், ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த இவர், கடந்த 1994 இல் முதன்முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
தொழில் ரீதியாக ஒரு பொறியியலாளரான இவர், மரணிக்கும்போது 61 வயதாகும்.
2000 - 2001 காலப் பகுதியில் காணி அபிவிருத்தி மற்றும் சிறு ஏற்றுமதி விவசாய உற்பத்திகள் அமைச்சராகவும்,
2004 - 2007 காலப் பகுதியில் நதிப் படுகை மற்றும் ரஜரட்ட அபிவிருத்தி அமைச்சராகவும்,
2007 - 2010 காலப் பகுதியில் தெங்கு அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும்,
2010 - 2015 காலப் பகுதியில் பெருந்தோட்ட கைத்தொழில் பிரதியமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment