பலாலி வானூர்தி நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வானூர்திகளை இயக்குவதற்கு பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம் அனுமதி அளித்துள்ளது என்று சிவில் வானூர்தி சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தென்னிந்திய நகரங்களுக்கு வானூர்திச் சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், வெளிநாடுகளுக்கான வானூர்தி சேவைகளை பலாலி வானூர்தி நிலையத்தில் இருந்து மேற்கொள்வதற்கு, பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கத்திடம் அரசு அனுமதி பெற்றுள்ளது.
பலாலி வானூர்தி நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வானூர்திகளை இயக்குவதற்கு, அனுமதி அளித்துள்ள பன்னாட்டு வான் போக்குவரத்து சங்கம், பலாலி வானூர்தி நிலையத்துக்கான தனித்துவமான குறியீட்டான JAF என்பதையும், (IATA code JAF) வழங்கியுள்ளது.
பலாலி வானூர்தி நிலையம், யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வானூர்தி நிலையம் என்றே பன்னாட்டு வானூர்திச் சேவைப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளது.
No comments:
Post a Comment