நிலத்தில் பயிரிடும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்வதால் மட்டுமே நாட்டின் அபிவிருத்தியை வெற்றிகரமாக எய்த முடியும் என ஆரம்ப தொழில் மற்றும் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிகச் செயலாளர் நிமல் கொட்டவலகெதர தெரிவித்தார்.
பேராதனை, கன்னொறுவ விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் இடம் பெற்ற வைபவம் ஒன்றிலே அவர் இதனைத் தெரிவித்தார். ஐயாயிரம் ஏற்றுமதி விவசாய கிராமங்கள் உருவாக்குதல் தொடர்பான வேலைத்திட்டத்தில் பயிற்றுவிப்பாளர்களை பயிற்று விக்கும் செலமர்விலே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுமக்களின் அன்றாட நிஜவாழ்வுடன் இணைந்து செல்லும் செய்திட்டங்களே வெற்றி அளிக்கும்.
எனவே எமது சாதாரண வாழ்வுடன் இணைந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் தந்திரோபாய வேலைத்திட்டங்களே வெற்றியளிக்கும்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது வளங்களை இனம் கண்டு அவற்றைத் திட்டமிட்டு பின்னர் முகாமை செய்வதால் மட்டுமே முடியும்.
கிராம மட்டத்தில் வேலைத்திட்டங்களை அமுலாக்கும் போது கிராம மக்களது வாழ்வுடன் இணைந்து செயற்பட வேண்டும். அது அவர்களில் உணர்வு பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு புரியும் மொழிப் பிரயோகத்தில் அவர்களுக்கு பிரச்சினைகளை தோற்றுவிக்காத வகையில் அமைதல் வேண்டும் என்றார்.
அக்குறணை குறூப் நிருபர்
No comments:
Post a Comment