பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் பாலியல் தொந்தரவுகளால் வருடாந்தம் 2000 மாணவர்கள், பல்கலைக்கழகங்களைக் கைவிடுவதாகத் தெரிய வந்துள்ளதாக கரத் திட்டமிடல் நீர் விநியோகம் மற்றும் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் பியந்த மாயாதுன்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது வருடந்தோறும் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இவர்களில் ஏழு வீதமானோர் குறிப்பாக 2000 பேர், கல்வியைக் கைவிடுகின்றனர். பகிடிவதை, பாலியல் வதைகளாலே இம்மாணவர்கள் கல்வியைக் கைவிட நேரிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்தப் புள்ளி விபரங்கள் தொடர்பான ஆவணத்தை பல்கலைக்கழக் கட்டமைப்பில் இருந்து பெற்றுள்ளது.
பல்கலைக்கழகங்களில் முதலாம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றாத மாணவர்கள் தொடர்பான அறிக்கையிலிருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment