மன்னார், மடு பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடமிருந்து 08 கிலோ 600 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மடு, குஞ்சிக்குளம் பிரதேசத்தில் நேற்றிரவு (05) 10.20 மணியளவில் இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதிக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மோப்பநாய் சகிதம் காரொன்றை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் 08 கிலோ 600 கிராம் கஞ்சா, 05 பைக்கற்றுக்களில் பொதி செய்யப்பட்டுக் காணப்பட்டதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்த 27, 26, 30 வயதுகளையுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இச்சந்தேகநபர்களை, மன்னார் நீதவான் நீதிமன்றில் இன்று (06) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment