திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள பாடசாலைக்கு அருகில் வடி சாராயம் விற்பனை செய்து வந்த பெண் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈச்சிலம்பற்று - வட்டுவான் பாடசாலைக்கு அருகில் சட்டவிரோதமாக மதுபான உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து அப்பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது அங்கிருந்து 10 போத்தல் சாராயம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் எனவும் இவர் ஏற்கனவே சட்டவிரோத சாராய உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நிலையில் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் இடம் பெற்று வருவதாகவும் தண்டம் அறவிடப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேபோல் இப்பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெற்று வருவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை சிவில் அமைப்புகளின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
ரொட்டவெவ நிருபர்
No comments:
Post a Comment