புதிய அரசியலமைப்பு தொடர்பாக அமைச்சர் மனோ கணேசனின் கோரிக்கை வரவேற்கத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இதற்கு அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக அனைத்து சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உடனடியாக கூட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தனது முகப்புத்தகத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், கட்சி பேதமின்றி, மலையகம் வடக்கு கிழக்கு என்று இல்லாமல் அனைத்து தமிழ் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முஸ்லிம் தலைவர்கள் முன்வர வேண்டும். அவர்களை வரவழைக்க வேண்டிய பொறுப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment