உன்னிச்சை குளத்தில் நீர் பற்றாக்குறை குடிநீரை சேமித்து வைக்குப்படி வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

உன்னிச்சை குளத்தில் நீர் பற்றாக்குறை குடிநீரை சேமித்து வைக்குப்படி வேண்டுகோள்

எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு மாவட்டம் உன்னிச்சை குளத்தில் நீர் பற்றாக்குறை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர்ப் பாவனையாளர்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளும்படி பொது மக்களுக்கு இன்று (31) அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட உன்னிச்சை குளத்திலும் நீர் தட்டுப்பாடாகியுள்ளது. இதனால் வவுனதீவிலுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீரை சுத்திகரித்து மக்கள் பாவனைக்கு வழங்க பல்வேறு அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மக்கள் பாவனைக்காக நீரை வழங்கும்போது அதனை பாவனையாளர்கள் சேமித்து வைத்துக் கொள்ளும்படியும், நீர்வெட்டு தொடர்பான நேர அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அவ் அதிகாரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment