நாடு குறித்து சிந்திக்கும் தலைவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் - ஆதிவாசிகளின் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

நாடு குறித்து சிந்திக்கும் தலைவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் - ஆதிவாசிகளின் தலைவர்

நாடு குறித்து சிந்திக்கும் தலைவரே அதிகாரத்துக்கு வரவேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

பதுளையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் இனம் மற்றும் மதம் குறித்து சிந்திக்கும் தலைவர் ஒருவரே ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு அரசியல் என்பது அருவருப்பான விடயமாக தற்போது மாறியுள்ளதாகவும் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலா எத்தோ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தியினையும் அவர் இதன்போது முற்றாக நிராகரித்துள்ளார்.

No comments:

Post a Comment