எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் திகதி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அணி உதயமாகுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு விருப்பமில்லை என்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் நிலைப்பாடாகும்.
மேலும் கடந்த தேர்தலில், பொதுஜன பெரமுன மக்களின் மனங்களை வெற்றிக்கொண்டுள்ளது ஆனால் மக்கள், அரசாங்கத்தின் மீதும் அதன் தலைமைத்துவத்தின் மீதும் விரக்தியடைந்துள்ள நிலையில் ஜனாதிபதியை மீண்டும் களமிறக்க முடியாது.
இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் எங்களது தேர்தல் பிரசாரமும் சூடுப்பிடிக்கும். அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.
அத்துடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசிய கட்சியினரே வாய்ப்பை வழங்கினர். அதனால்தான் நாடும் பாரிய இன்னலுக்கு முகம் கொடுத்துள்ளது.
மேலும் அதிகார போட்டி வந்தவுடன் ஜனாதிபதியை எம்மிடம் ஒப்படைப்பதில் எந்ததொரு அர்த்தமும் இல்லை” என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment