கலால் திணைக்களத்தின் அனுமதி பெற்ற இடங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து இடங்களையும் சட்டவிரோத மதுபானம் விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனை பிரதேசங்களாக அடையாளப்படுத்த விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் அதற்கு சமாந்திரமாக இந்த வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டவிரோத மதுபான மற்றும் போதைப் பொருள் விற்பனை, பாவனை நிலையங்கள், இடங்கள், பிரதேசங்களை சுற்றிவளைக்குமாறு கலால் திணைக்களத்தின் ஆணையாளர், திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கலால் திணைக்களத்தின் அனுமதி பெற்ற இடங்களில் சட்டத்திற்கு உட்பட்டு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் கண்காணிக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கலால் திணைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மதுபான விற்பனையில் ஈடுபடாத அனுமதியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகளாக நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும், பாடசாலைகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் போதைப் பொருள் பாவனை குறித்து தெரியப்படுத்த இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தகவல் வழங்குபவர்களின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படும் என கலால் திணைக்களம் உத்தரவாதமளித்துள்ளது.
011 2045077/78 என்ற இலக்கத்துக்கு தகவல்களை வழங்க முடியும் எனவும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment