ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக 61 இராணுவ வீரர்களைக் கொண்ட குழுவொன்று இன்று (03) தென் சூடானுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.
இந்தக் குழுவில் 11 அதிகாரிகள் மற்றும் இராணுவ வைத்திய படையின் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கையிலிருந்து தென்சூடானுக்கு புறப்பட்டுச் செல்லும் 6ஆவது குழுவினராக இக்குழுவினர் உள்ளதோடு, இக்குழுவினர் ஒரு வருடகாலம் அங்கு பணியாற்றுவார்களென இராணுவம் தெரிவித்துள்ளது.
இக்குழுவினர் அங்கு புறப்பட்டுச் செல்லும் பட்சத்தில், அங்கு சேவையில் ஈடுபட்ட 66 இராணுவ வீரர்களைக் கொண்ட குழுவொன்று மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக, இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment