வடக்கு கிழக்கு பட்டதாரிகள் பாதிக்கப்படும் நிலமையே இருக்கின்றது - வேலையற்ற பட்டதாரிகள் சந்திப்பில் சாந்தி எம்பி தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 31, 2019

வடக்கு கிழக்கு பட்டதாரிகள் பாதிக்கப்படும் நிலமையே இருக்கின்றது - வேலையற்ற பட்டதாரிகள் சந்திப்பில் சாந்தி எம்பி தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளில் இந்த முறையும் நியமனத்திற்குள் உள்வாங்கப்படாத பட்டதாரிகளுக்கும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று (31) இடம்பெற்றது.

இன்று காலை 10.00 மணியளவில் முள்ளியவளைப் பகுதியில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் சுமார் 40 வேலையற்ற பட்டதாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவுடன் சந்திப்பை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"வேலையற்ற பட்டதாரிகள் இவர்கள் மாவட்டத்தின் பிரதேச செயலகம் மாவட்ட செயலகங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் பங்கு பற்றியும் வேலை கிடைக்காதவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் 58 பேர் இவ்வாறாக தகுதி இருந்தும் வேலை கிடைக்காதவர்கள் ஆக இருக்கின்றார்கள்."

"வடக்கு கிழக்கு பல்கலைக்கழகங்களை பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டு தங்களது பட்டப் படிப்பினை முடித்தம் இவர்கள் வேலை கிடைக்காதவர்கள் ஆக இருக்கின்றார்கள் ஆனால் ஏனைய பல்கலைக்கழகங்களில் இதே ஆண்டு பட்டப்படிப்பை முடித்தவருக்கு நியமனம் வழங்கப்படுகின்ற வேளையில் இந்த வடக்கு கிழக்கு பல்கலைக் கழகங்களில் ஒவ்வொரு வருடமும் பிந்தி கற்கைநெறிகள் ஆரம்பிக்க படுவதனால் இந்த பட்டதாரிகள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்."
"எனவே ஏனைய மாகாணங்களோடு ஒப்பிடாமலேயே வடக்கு கிழக்கு பட்டதாரிகளை இவ்வாறு 2017 ஆம் ஆண்டு தங்களது கற்கை நெறிகளை முடிவுறுத்திய பட்டதாரிகளை விசேடமாக கவனத்தில் கொண்டு இவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு யுத்தம் மீண்டு பல துன்பங்களின் அடிப்படையில் கற்கை நெறிகளை முடித்தும் அவர்கள் தகுதியானவர்களாக இருந்தும் மீண்டும் இந்த வடக்கு கிழக்கு பட்டதாரிகள் பாதிக்கப்படும் நிலமையே அவதானிக்க கூடியதாக இருக்கின்றது."

"எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைச்சு மட்டத்தில் இது சம்பந்தமாக நாங்களும் இதை குரல் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறோம். இந்த பட்டதாரிகளை விசேடமாக கவனத்தில் கொண்டு ஏனைய மாகாணங்களில் உள்வாங்கப்படுகின்றது போல 2017 ஆம் ஆண்டு கற்கை நெறிகளை முடித்தபட்டதாரிகளை உள்வாங்க படுவதோடு அதேவேளையில் வடக்கு கிழக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற வகையில் 2018 ஆம் ஆண்டு தங்களது கற்கைநெறிகளை முடித்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளையும் உள்வாங்குவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த இடத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்தார்."

மாங்குளம் நிருபர் - எஸ். தவசீலன்

No comments:

Post a Comment