கல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று தீக்கிரை! - News View

About Us

About Us

Breaking

Sunday, July 28, 2019

கல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்று தீக்கிரை!

கல்முனை சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த உணவகத்தின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த உணவகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த கல்முனை மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இத்தீவிபத்து காரணமாக உணவகத்தின் சமையலறை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், கடையின் பெயர்ப்பலகையும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

எனினும் இவ்விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு எரிவாயு கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment