இங்கிரிய பகுதியில் உள்ள பிரதான தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (28) காலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதுடன் தற்போது தீ தொழிற்சாலை முழுவதும் பரவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஹொரண, பானந்துறை மற்றும் களுத்துறை பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.
எனினும் இந்த தீ விபத்து காரணமாக உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு தீ பரவியுள்ளது.
தீ விபத்தினால் தொழிற்சாலையின் இயந்திரங்கள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதனால் இந்த தீ விபத்து இடம்பெற்றது என்பது தொடர்பில் இதுவரையில் இனங்காணப்படவில்லை.

No comments:
Post a Comment