மின்சார சபைக்கான எரிபொருளை வௌ்ளிக்கிழமை வரை விநியோகிக்கத் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Monday, July 1, 2019

மின்சார சபைக்கான எரிபொருளை வௌ்ளிக்கிழமை வரை விநியோகிக்கத் தீர்மானம்

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மின்சார சபைக்கான எரிபொருளை விநியோகிப்பதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இன்று (முதலாம் திகதி) நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதற்கு பெற்றோலியத்துறை தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.

கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை வரையான எண்ணெய்க் குழாய்களின் திருத்தப் பணிகளுக்கு மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க இடையூறு ஏற்படுத்துவதாகத் தெரிவித்து இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment