நாட்டை சிறந்த முறையில் கொண்டு செல்வதற்கு இளந்தலைமுறையினரில் ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டுமென்ற எண்ணம் அனைவரது மனதிலும் உள்ளதென அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ருவான் விஜேவர்தன மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஜனநாயம் நிறைந்த கட்சியென்றே நான் நினைக்கின்றேன்.
ஆனால் குறித்த கட்சிகளுக்குள் பல பிரிவுகள் தற்போது காணப்படுகின்றது. அதில் ஒரு பிரிவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அதேபோன்று மற்றும் சிலர், அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்று கருதுகின்றனர்.
ஆனால், உண்மையாகவே இவ்விடயத்தில் நாம் முதலில் கலந்துரையாடலில் ஈடுபட்டு, அதனூடாகவே ஜனாதிபதி யார் என்ற இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளோம்.
மேலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு வெற்றியடைவது என்பது குறித்தும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளோம்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதி ஏனைய பல கட்சிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றமையானது அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிரான நடவடிக்கை அல்ல” என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment