ஓட்டமாவடியைச் சேர்ந்த யாகூபின் ஜனாஸா குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, July 27, 2019

ஓட்டமாவடியைச் சேர்ந்த யாகூபின் ஜனாஸா குவைத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது

எச்.எம்.எம்.பர்ஸான்
மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடிசைச் சேர்ந்த நபரொருவர் குவைத்தில் (26) மாரடைப்பால் மரணமானார்.

குவைத் நாட்டில் சாரதியாக பணிபுரியும் ஓட்டமாவடி - 2ம் வட்டாரம் எம்.கே. வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அபுசாலி யாகூப் (வயது 42) என்பவரே குவைத்தில் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த நபர் அன்றையதினம் தனது மனைவி பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடும் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகா கூறியுள்ளார். 

அறையில் தனிமையில் இருக்காமல் அங்குள்ள உறவினரின் அறைக்குச் செல்லும்படி மனைவி கூறியவுடன் குறித்த நபர் அவருடைய வாகனத்தில் தனிமையில் பயணித்து உறவினரின் அறைக்குச் சென்றுள்ளார். அவர் அங்கு சென்ற சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் ஜனாஸாவை நாட்டிற்கு கொண்டு வருவதற்காக குடும்பத்தினர் முயற்சித்ததோடு, கொண்டு வருவதன் சிரமம் காரணமாக மரணித்தவரின் மனைவியின் ஒப்புதலுடன் ஜனாஸா இன்று (27) குவைத் சுலைபிகாத் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment