செம்மண்ணோடை பயாஸ்
வாழைச்சேனைக்கான சுத்தமான குடிநீரினை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளை ஆரம்பித்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம் 15.07.2019ம் திகதி திங்கட்கிழமை கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.இம்தியாஸ் இல்லத்தில் இடம்பெற்றது.
கல்குடத்தொகுதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், அமைப்பாளர் றியாழின் வேண்டுகோளின் பேரில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் முன்னாள் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு மற்றும் உயர் கல்வியமைச்சருருமான றவூப் ஹக்கீம் அவர்களின் 150 மில்லியன் நிதியொதிக்கீட்டில் வாழைச்சேனை சுத்தமான குடிநீர்த்திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைகள் ஆரம்பிப்பதற்கான நிதியொதிக்கீடு மற்றும் ஒப்பந்த வேலைகள் முடிவுற்றமை தொடர்பிலும் கால தாமதமாத்திற்கான காரணங்கள் தொடர்பிலும் வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மக்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எல்.ஏ.கபூர், எம்.ஐ.இம்தியாஸ், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரீ.எம்.அன்வர், ஏ.ஜி. அஸீஸுர் ரஹும் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், போராளிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment