அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகளை இலகுவாக முறியடித்தோம் - அமைச்சர் சாகல ரத்னாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகளை இலகுவாக முறியடித்தோம் - அமைச்சர் சாகல ரத்னாயக்க

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் எவ்வளவு பிரயத்தனங்கள் எடுத்தபோதிலும், அவைகளை முறியடித்து தமது இலக்கை நோக்கிய பயணத்தில் அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமென துறைமுகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

மாத்தறை - பிடபெத்தர பகுதியில் இடம்பெற்ற வீதி திறப்பு விழா வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், 2018ம் ஆண்டில் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் தோற்கடித்தது. பின்னர் ஒக்டோபர் 26ல் இரண்டு மாதகாலத்திற்கு எதிர்க்கட்சிகள் கள்ளத்தனமான முறையில் அரசாங்கமொன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.

இருந்தபோதிலும் நாங்கள் நீதிமன்றம் சென்று சட்டரீதியாக மேற்கொண்ட நடவடிக்கையால் அரசாங்கம் மீண்டும் எமது கைக்குக் கிடைத்தது.

இதன்பலனாக நாம் மீண்டும் மேற்கொண்ட அபிவிருத்தியை பொருத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்தனர். அதனையும் நாங்கள் இலகுவாக தோல்வியடையச் செய்துள்ளோம்.

இன்று எமது அரசாங்கம் நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்திக்காகவும் சுபீட்சத்துக்குமாகவே அபிவிருத்திகளை மேற்கொண்டு செல்கிறோம். எதிர்கால தேர்தல்களை மையமாகக்கொண்டு எந்த அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் பிரதேச அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

மாத்தறை நிருபர்

No comments:

Post a Comment