குளியாப்பிட்டியில் 35 வீடுகளை கொண்ட வீடமைப்பு கிராமம் - வெகுவிரைவில் அடிக்கல் நாட்டு விழா என்கிறார் கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

குளியாப்பிட்டியில் 35 வீடுகளை கொண்ட வீடமைப்பு கிராமம் - வெகுவிரைவில் அடிக்கல் நாட்டு விழா என்கிறார் கல்வி அமைச்சர்

குளியாப்பிட்டி தொகுதியின் விஹல்பொல, மானாவையில் வசதிகுறைந்த வறிய குடும்பங்களின் நன்மை கருதி வீடமைப்பு திட்டமொன்று நிருமாணிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சரும், குளியாப்பிட்டி தொகுதி அமைப்பாளருமான அகில விராஜ் காரியவசத்தின் ஆலோசனையின் பேரில் வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மானாவை, தள்ளியத்த ஆகிய பிரதேசங்களில் 35 வீடுகள் நிருமாணிக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் தலா ஐந்து இலட்சம் ரூபா செலவிடப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்துக்கு மேலதிகமாக வீடமைப்பு கடன் திட்டம் ஒன்றும் இங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வறிய குடும்பங்களைச் சேர்ந்த மேலும் முப்பது குடும்பங்களுக்கு வீடமைப்பு கடனாக தலா நான்கு இலட்சம் ரூபா வழங்கப்படவுளள்ளன. 

பிரஸ்தாப வீடமைப்பு திட்ட நடவடிக்கைகள் அடுத்து வரும் ஆறு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குளியாப்பிட்டி நிருபர்

No comments:

Post a Comment