புகையிரதத்தில் தாயும் மகளும் மோதுண்டு பலத்த காயம் - வைத்தியசாலையில் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 2, 2019

புகையிரதத்தில் தாயும் மகளும் மோதுண்டு பலத்த காயம் - வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே புகையிரதத்தில் நேற்று (02) தாயும் மகளும் மோதுண்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். 

இதேவேளை, பலத்த காயங்களுக்குள்ளான 27 வயதுடைய தாயும் 07 வயதுடைய சிறுமியும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக நாவலபிட்டி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். 

இந்த விபத்து நாவலபிட்டி நகர புகையிரத பாதையில் இடம்பெற்றதாகவும் புகையிரம் வரும் பொழுது தாயும் மகளும் புகையிரத வீதியில் நின்று கொண்டிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

காயங்களுக்குள்ளான தாயும் மகளும் கெட்டபுலா கடுங்சேன பகுதியை சேர்நதவர்கள் தெரியவந்துள்ளது.  இவ்விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

மலையக நிருபர் கிரிஷாந்தன்

No comments:

Post a Comment