தங்காலை பகுதியில் போதைப் பொருள் வியாபாரி ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
தங்காலை, கதுருபொகுண பகுதியில் கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து நடத்திய சோதனையின்போது, இச்சந்தேகநபர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.
தங்காலை, கதுருபொகுண பகுதியைச் சேர்ந்த இச்சந்தேக நபர், போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபடுபவரென தெரியவந்துள்ளதோடு, இச்சந்தேக நபர் கைது செய்யப்படும்போது, அவர் தனது உடைமையில் மறைத்து வைத்திருந்த 205 கிராம் கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்டுள்ள கஞ்சாவுடன் சந்தேகநபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக தங்காலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment