இலங்கையை வந்தடைந்தார் போலந்து வெளியுறவு அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 28, 2025

இலங்கையை வந்தடைந்தார் போலந்து வெளியுறவு அமைச்சர்

போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி (Radosław Sikorski), இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை இலங்கை வெளியுறவுத் துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர வரவேற்றார்.

ஐரோப்பிய ஒன்றிய கவுன்சிலின் தலைமைத்துவத்தை வகிக்கும் போலந்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் சிகோர்ஸ்கி, இன்று இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் உடன் உத்தியோகப்பூர்வ சந்திப்பை நடத்த உள்ளார்.

இந்த விஜயத்தின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதும், மேம்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்துவதுமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து வெளிவிககார அமைச்சர் ரடோஸ்லாவ் சிகோர்ஸ்கி எதிர்வரும் மே 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார் என்பதோடு இலங்கையின் பல்வேறு இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment