பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளில் மாற்றம் - News View

About Us

About Us

Breaking

Saturday, May 24, 2025

பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளில் மாற்றம்

பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலைகளில் அடுத்த மாதம் 1ஆம் திகதி முதல் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் நிர்வாக மற்றும் நிர்வாகம் சாரா ஊழியர்களுக்கான உணவு கட்டணங்களை திருத்தியமைக்க கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற குழு கூட்டத்தில் திர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த முடிவுகளை மீளாய்வு செய்ய சபாநாயகர் டொக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் பாராளுமன்ற குழு கூட்டம் நேற்று (23) நடைபெற்றது.

இதன்படி பாராளுமன்ற ஊழியர்களுக்கான உணவு விலையை அடுத்த மாதம் முதல் மறுசீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment