2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு இன்று முதல் (ஜுலை 1ஆம் திகதி) அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம் 11 இலட்சம் அரச சேவையாளர்களுக்கு 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது. காப்புறுதி, விசேட கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பிணக்குகளை தீர்த்தல், விசேட தேவையுடையவர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பிலான யோசனையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்தக் கொடுப்பனவுகளுக்காக 40 ஆயிரம் மில்லியனை வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுகீடு செய்துள்ளது.
11 இலட்சம் அரச சேவையாளர்களுக்கும் 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக 20 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டுவரும் 7,800 ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும்.
சேவையாளர்களுக்கும் 2,500 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குவதற்காக 20 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டாலும் வாழ்க்கைச் செலவுக்காக வழங்கப்பட்டுவரும் 7,800 ரூபா அவ்வாறே தொடர்ந்தும் வழங்கப்படும்.
இதேபோன்று முப்படையினர் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் பெற்றுக்கொள்ளும் கொடுப்பனவும் இன்றுமுதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் முப்படையினருக்கு 23,231 ரூபாவரை சலுகைக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அதிகாரிகளுக்கு 19,350 ரூபா சலுகை கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முப்படையினருக்கு வழங்கப்படும் வீட்டுக் கூலிக்கான கொடுப்பனவு இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கமொண்டோ கொடுப்பனவு ரூபா. 1000 ஆயிரத்திலிருந்து ரூபா. 5000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,175 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்கான யோசனையும் இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது. 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூதியம் பெற்ற 5 இலட்சம் வரையிலான ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச கொடுப்பனவு 2,800 ரூபாவிருந்து 20,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவின் அடிப்படையில் ஓய்வூதியக்காரர்களுக்கு வழங்கப்படும் 3,525 ரூபாவும் அவ்வாறே வழங்கப்படும். ஒய்வூதியர்களின் பிணக்குகளை தீர்ப்பதற்காக 12 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த கொடுப்பனவு 2,000 ரூபாவிலிருந்து ரூபா. 5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 32 ஆயிரம் பேருக்கு மேற்படி கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. என்றாலும், மேலும் 40 ஆயிரம் பேர் விசேட தேவையுடையவர்களாக இனங்காணப்பட்டமைக்கமைய மொத்தமாக 72 ஆயிரம் பேருக்கு இனிவரும் காலங்களில் மாதாந்தம் ரூபா. 5,000ம் வழங்கப்படவுள்ளது. இதற்காக 4,350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள 21 ஆயிரம் பேருக்கு அரசாங்கம் தற்போது ரூபா. 5,000ம் மாதாந்தம் வழங்கி வருகிறது. இந்தக் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள மேலும் 5,000 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதன் பிரகாரம் 26 ஆயிரம் சிறுநீரக நோயாளர்களுக்கு ரூபா. 5,000 வீதம் மாதாந்தம் வழங்க 1,840 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்றுமுதல் நடைமுறைக்குவரும் இந்தக் கொடுப்பனவு அதிகரிப்புகளுக்காக மொத்தம் 39,365 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment