தீவிரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாத போதும் இஸ்லாத்தை தீவிரவாதத்துடன் இணைத்து பேசுவது ஏன்? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வியெழுப்பியுள்ளார்.
சவூதி அரேபியாவின் மக்கா நகரில் நேற்றுமுன்தினம் (01.05.2019) நடைபெற்ற OIC யின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே இம்ரான் கான் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் LTTE தாக்குதல் நடத்திய போது யாரும் இந்து மதத்தை குறை கூறவில்லை. ஜப்பானியர்கள் அமெரிக்க கப்பல்களை தகர்த்த போது யாரும் ஜப்பானியர்களின் மதத்தை குறை கூறவில்லை.
ஆனால், உலகில் எங்காவது தீவிரவாத தாக்குதல் நடந்தால் இஸ்லாத்தை தொடர்பு படுத்துவது ஏன்?
மேற்குலகில் வாழ்வோம் நபிகள் நாயகத்தை கேவலப்படுத்த முயல்கிறார்கள். ஆனால் அதனை யாரும் தடுப்பதில்லை. மேற்க்குலகு மத்தியில் நபிகள் நாயகத்தை பற்றியும், இஸ்லாத்தை பற்றியும் தெரிவிக்க OIC தவறிவிட்டது.
இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் நமது மனதில் உயர்ந்த இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள். நாம் மேற்குலகுக்கு இறைத் தூதர் பற்றிய விளக்கம் கொடுக்கா விட்டால் அவர்கள் நம்மை தொடர்ந்து துன்பப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள்.
மதத்திற்கும் தீவிரவாதத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எந்த மதமும் அப்பாவிகளை கொலை செய்ய சொல்லவில்லை. இது இஸ்லாமிய மதத்தின் மீதான மேற்க்கின் பயத்தையே காட்டுகிறது. என்றார்.
Subaideen Ashraffkhan
No comments:
Post a Comment