அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடை நிறுத்தப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை இடை நிறுத்தப்பட்டது

கடந்த 29ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக்கையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தம் செய்துள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கடந்த 29 ஆம் திகதி வெளியான சுற்றறிக்கையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது கடமை நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் வரும் போது ஆண் உத்தியோகத்தர்கள் காற்சட்டை மற்றும் மேற்சட்டை அல்லது தேசிய உடை அணிந்திருத்தல் வேண்டும் என்பதுடன் பெண் உத்தியோகத்தர்கள் சேலை அல்லது கண்டியச் சேலை (ஒஸரி) அணிந்திருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment