பனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்யுமாறு கைத்தொழில் பிரதி அமைச்சர் பணிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

பனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்யுமாறு கைத்தொழில் பிரதி அமைச்சர் பணிப்பு

வவுனியாவில் அமைக்கப்பட்ட பனையோலை சார்ந்த உற்பத்திக் கிராமத்தில் காணப்படும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கைத்தொழில் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், பனையோலை சார்ந்த அலுவலகப் பணிகளைப் பாராட்டப்பட வேண்டிய அதேநேரம் உற்பத்திக் கிராமத்தின் அலுவலகத்தின் புனரமைப்பு பணிகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. 

நான் ஒரு கிராமத்தவன் என்ற அடிப்படையில் இவ்வாறான விடயங்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானது. ஒப்பந்ததாரர் சரியான முறையில் இப்பணிகளை மேற்கொள்ளவில்லை. சிறு சிறு குறைபாடுகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் நாங்கள் சரியான முறையில் செயற்படுத்தவில்லை என்று எண்ணிவிடுவார்கள்.

ஆகவே உடனடியாக இங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யப்பட வேண்டும். அதுவரை ஒப்பந்ததாரருக்குரிய கொடுப்பனவை நிறுத்தி வைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திப் பொருட்கள் திறமையாகவும் தரமானதாகவும் இருக்கும் போது அதனை ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வவுனியா நிருபர்

No comments:

Post a Comment