கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சேறு பூச இனவாதிகள் முயற்சி - வைத்தியசாலை நிருவாகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 29, 2019

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சேறு பூச இனவாதிகள் முயற்சி - வைத்தியசாலை நிருவாகம்

பாறுக் ஷிஹான்
எமது வைத்தியசாலையின் பெயருக்கு அவதூறு மேற்கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளாவிடின் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினை நாடி தீர்வை பெறவுள்ளதாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் பிறந்த குழந்தைக்கு சஹ்ரான் பெயர் சூட்டப்பட்டதாக சமூக வலைத்தளம் மற்றும் சில இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர் தற்போதைய காலகட்டத்தில் ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு இனமுரண்பாடுகளை தோற்றுவிக்கமுனைவதில் அனைத்து இன மக்களும் அவதானமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியுள்ளது.

இச்சம்பவம் போலியாக சோடிக்கப்பட்டதாகவும் காழ்ப்புணர்சியின் மூலம் எமது வைத்தியசாலைக்கு அவதூறு பரப்பப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் அவ்வாறான எந்த நிகழ்வும் இடம்பெறவில்லையென கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராக தெரிவிக்கின்றேன்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சியை சகித்துக் கொள்ளமுடியாத சில விசமிகள் தங்களது சமூகவலைத்தளங்களின் மூலம் சேறுபூசும் செயற்பாட்டினை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர்.

சில இனவாதிகள் இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவிக்க தூபமிடும் வகையில் இனவாத சமூகவலைத்தளங்களில் வைத்தியசாலையின் நற்பெயருக்கு கழங்கம் ஏற்படும் வகையில் அவதூறுகளை பரப்பிவருகின்றனர்.

மேலும் இதனை கண்டித்து நாளை சில தாதிய சங்கங்கள் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு அசம்பாவிதங்களும் எமது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவில்லையென வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றனர். இருந்த போதும் அவதூறுகளை பரப்பியவர்களுக்கு எதிராக. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக இந்த வைத்தியசாலைக்கு சேறு பூசவும் அவ பெயர் ஏற்படுத்தவும் சில முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மருத்துவ தாதி ஒருவர் பற்றி பொய்யான தகவல் ஒன்றை முகநூலில் பதிவிட்டு அதனை இனவாதத்துடனும் வைத்தியசாலையின் நற்பெயரை கலங்கப்படுத்தும் வகையிலும் அந்த பதிவு அமைந்துள்ளது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையானது பல சவால்களுக்கு மத்தியில் வைத்தியட்சகர் முரளீஸ்வரன் அவர்களின் முயற்சியினால் இதன் பௌதீக வளங்கள் நவீன மருத்துவ வசதிகள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகள் என்பன ஏற்படுத்தப்பட்டு வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை சிறந்த சேவை மற்றும் மிகச்சிறப்பான நிருவாகக் கட்டமைப்பு என்பவற்றுக்காக இலங்கையில் முன்மாதிரியான வைத்தியசாலையாக திகழ்வதுடன் இதற்காக பல விருதுகளையும் பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

வைத்தியசாலையின் வினைத்திறனான சேவை சிந்த நிருவாகம் என்பவற்றை கருத்தில் கொண்டு அரசாங்கம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிய கட்டிடங்கள் நவீன மருத்துவ வசதிகளை ஏற்படுத்தியது. ஆனால் இதனை சில குறுகிய நோக்கம் உடையோர் தடுப்பதற்கு பல முயற்சிகள் ஏற்படுத்தியபோதும் இதன் உண்மையான சிறப்பான சேவைக்கு முன்பு அவைகள் பயனளிக்கவில்லை என்பதுடன் வைத்தியசாலை நிருவாகத்தின் தொடர்முயற்சிகளும் முக்கிய காரணங்களாகும்.

மிகவும் பழைமைவாய்ந்ததாக சுமார் 130 வருடங்களுக்கு அதிகமாக வரலாற்றைக்கொண்ட கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லை கிராமஙகளில் இருந்தும் தினமும் மிக அதிகமாக மக்கள் வைத்திய சேவையை பெற்றுவருகின்றனர்.

திருப்தியான வைத்திய சேவையை வழங்கும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் நற்பெயருக்கு களங்கம் எற்படுத்தும் திட்டமிட்ட விசமிகளின் செயலுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

எந்த ஒரு அசம்பாவிதங்களும் எமது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெறவில்லையென வைத்தியசாலை நிருவாகம் தெரிவிக்கின்றனர். இருந்த போதும் அவதூறுகளை பரப்பியவர்களுக்கு எதிராக. பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment