இலங்கை - இந்திய உறவை மேலும் பலப்படுத்த உதவுங்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

இலங்கை - இந்திய உறவை மேலும் பலப்படுத்த உதவுங்கள்

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த ஒத்துழைக்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக கலாநிதி ஜெய்சங்கர் நியமிக்கப்பட்டமைக்கு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்திருந்த வாழ்த்துச் செய்திக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் கடந்த 23ஆம் திகதி வெளியாகியிருந்தன. இதில் ஆளுங்கட்சியாகவிருந்த பாரதிய ஜனதாக் கட்சி 351 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் இந்தியாவில் ஆட்சியமைத்ததுடன் நரேந்திர மோடி இரண்டாவது தடவையாகவும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் மோடியின் அமைச்சரவையில் எவரும் எதிர்பார்த்திராத வண்ணம் முன்னாள் இந்திய வெளிவுறவு செயலாளர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்துக்கு பல உலகத் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அமைச்சர் மங்கள சமரவீர தமது டுவிட்டர் தளத்தில், எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஜெய்சங்கர் இந்திய வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் இந்தியாவுடனான உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், உங்களது வாழ்த்துக்கு நன்றிகள். இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments:

Post a Comment