அரசாங்கம் இருப்பை தக்க வைத்துக் கொள்வற்காக குற்றவாளிகளை பாதுகாக்க முனையக் கூடாதென நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் குற்றவாளிகளை பாதுகாப்பார்களாயின் மீண்டுமொரு ஏப்ரல் 21ஐ தடுக்க முடியாதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதுரலிய ரத்தன தேரர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக வியாழேந்திரன் இன்று (சனிக்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
இதன்போது போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே வியாழேந்திரன் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் இன்னும் சிலர் நாட்டுக்குள் இருக்கின்றனர்.
அண்மையில் திருக்கோணமலை பகுதியில் கருத்தரை மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டன. அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் ஆயுதங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளமை ஊடாக இதனை உறுதிப்படுத்திகொள்ள முடியும்.
முஸ்லிம் பயங்கரவாதம் நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.
கிழக்கு மாகாணம் நல்லிணக்க போர்வைக்குள் தமிழர் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதை இன்று கூறவில்லை 2015 ஆம் ஆண்டிலிருந்தே கூறி வருகின்றோம்.
இதேவேளை பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தி பேசப்படுகின்ற அமைச்சர் ரிசாஷ் பதியுதீன் ஆளுநர்களான ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதிவியிலிருந்து விலக்கப்பட வேண்டும்.
மேலும் இவர்களின் அதிகாரங்களை பறிக்கப்பட்டு முறைான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அந்தவகையில் ரிஷாட்டை உடனடியாக பதவி நீக்கம் செய்ய பிரதமர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதேபோன்று ஜனாதிபதியும் ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என ச.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment