உண்ணாவிரத்தை நிறைவுசெய்தார் வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 1, 2019

உண்ணாவிரத்தை நிறைவுசெய்தார் வியாழேந்திரன்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாண ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரனால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதத்தினை அவர் இன்று இரவு நிறைவு செய்தார்.

அவர், நிறைவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, உண்ணவிரதத்தை முடித்துக் கொண்டு கருத்துத் தெரிவித்த வியாழேந்திரன், “கிழக்கு மாகாண ஆளுநர், மேல் மாகாண ஆளுநர், அமைச்சர் ரிசாட் ஆகியோரை பதிவி நீக்கும் வரையில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தர்.

No comments:

Post a Comment