தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கியதாகக் கருதப்படும் ஒருவர் தெஹிவளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் சஹிட் எனும் தொலைத்தொடர்பு பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஹொரவபொத்தானை, கெப்பித்திகொல்லாவ, எல்லேவ, பத்தேவ பகுதிகளில் பள்ளிவாசல்களை நிர்மாணித்தார் என பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவூதியில் நீண்ட காலம் பொறியியலாளராக பணியாற்றிய இவர் பள்ளிவாசல்களை நிர்மாணிக்க பணம் பெற்றது எவ்வாறு என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சஹரானின் சகா அபூபக்கர் என்பவருடன் இவர் தொடர்பில் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment