புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கடந்த ஒரு மாதம் நோன்பிருந்து இரவு பகலாக வணக்க வழிபாடுகளிலும், அல்லாஹ்வுக்கும் அவனது றஸூலுக்கும் கட்டுப்பட்டு பல்வேறுபட்ட அமல்களிலே முழு நாளையும் கழித்து இன்று புனிதமான ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடுகின்ற அன்புக்குரிய உறவுகள், சர்வதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் உள்ள அத்தனை எனது உடன் பிறப்புக்களுக்கும் எனது "ஈதுல் பித்ர்" நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
குறிப்பாக முஸ்லிம் சமூகம் தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் பல்வேறுபட்ட துன்பங்களை, துயரங்களை சந்தி சவால்களை சந்தித்துக்கொண்டிருக்கின்ற இந்த சூழ் நிலையிலே சர்வதேச சக்திகளும் தேசிய ரீதியிலான சக்திகளும் முஸ்லிம்களை இல்லாமல் செய்து முஸ்லிம்களை மோதவிட்டு முஸ்லிம்களை அழித்து முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை அழித்து முஸ்லிம்களை அநாதையாக்குவதற்காகத் திட்டமிட்டு செயற்படுத்துகின்ற இந்த சூழ்நிலையிலே முஸ்லிம்களுடைய பிரதிநித்துவத்தை பாதுகாத்து முஸ்லிம்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுத்து முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு சூழ் நிலைகளை உருவாக்கப்பட வேண்டுமென்று இறைவனிடத்தில் நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக.
இறைவனிடத்தில் நம் எல்லோருக்கும் மிகச் சிறப்பான எதிர்காலத்தையும் முஸ்லிம் சமூகம் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் மிக நிம்மதியான, மிகச் சிறப்பான எதிர் காலத்திலே வாழ்வதற்கான சூழ் நிலைகளை எல்லாம் வல்ல இறைவன் உருவாக்க வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் நாங்கள் எல்லோரும் பிரார்த்திப்போமாக என கூறி உங்கள் எல்வோருக்கும் புனித "ஈதுல் பித்ர்" நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment