சந்தோஷமும், துக்கமும் இணைந்ததான ஈதுல் பிதர் தின வாழ்த்துக்களை இலங்கை மற்றும் உலக வாழ் முஸ்லிம் மக்களிற்கு தெரிவித்துக் கொள்கின்றேன் என தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவரும், முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேற்படி பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதிகளால் தேவாலயங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் நிகழ்ந்தேறிய கொடூரத் தாக்குதல்களினால் அப்பாவி உயிர்கள் பலியான சோகமும், முஸ்லிம் மக்களின் உடைமைகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களும் சோகம் நிறைந்த நிகழ்வுகள்.
பெரும்பான்மை சிங்கள மக்களும், பாதிக்கப்பட்ட சமூகத்தவரும் இவ்வாறான கறைபடிந்த சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தவர்களை புரிந்து கொண்டு அன்றாட வாழ்க்கையை தடையின்றி வாழவும், சமய அனுட்டானங்களை முன்னெடுக்கவும் பக்கபலமாக இருப்பது மகிழ்விற்குரிய விடயம்.
அத்துடன் இப் புனித ரம்ழான் மாதத்தின் கடமைகளை அச்சுறுத்தலின்றி நிறைவேற்றிக் கொள்ள புரிந்துணர்வுடன் பணியாற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எனது உளப்பூர்வமான நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
இவ்வாறான நிகழ்வுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து எமது முஸ்லிம் சமூகம் மீண்டெழுந்து வளமான நாட்டைக் கட்டியெழுப்ப, ஒன்றிணைந்து பயணிக்க நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
Mohammed Rasooldeen - Justice of the Peace
Media Secretary
No comments:
Post a Comment