தவறேதும் புரியாத ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றது - உபரதன தேரர் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

தவறேதும் புரியாத ஆளுநர் ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றது - உபரதன தேரர்

தவறேதும் புரியாத ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை பதவியிலிருந்து நீக்குவது அவசியமற்றதென மொரவெவ பிரதேச சபையின் தலைவர் பொல்ஹேன்கொட உபரதன தேரர் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை ஜெகப் பார்க் ஹோட்டலில் இன்று (02) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மாவட்ட புனரமைப்புக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறியுள்ளார்.

ஹிஸ்புல்லா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து ஆராய்ந்து பார்த்தபோது, அவர் மீது எந்ததொரு தவறுமில்லை என்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆகவே அவரை பதவியிலிருந்து நீக்குவது முறையற்ற செயற்பாடாகுமெனவும் பொல்ஹேன்கொட உபரதன தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment