அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இன்று இலங்கை வருகின்றார் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இன்று இலங்கை வருகின்றார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பீடர் டடின் இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரையும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அவுஸ்திரேலிய அமைச்சர் பீடர் (D)டடின் ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட கடுவாபிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கும் சென்று பார்வையிடவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதேவேளை, பாதுகாப்பு நிலைமை மற்றும் மனித கடத்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் நோக்கில் நாளைய தினம் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும், அவர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment