சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்! - ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

சிறிலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தம் தருகின்றனர்! - ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆளுநர் பதவியிருந்து இராஜினாமாச் செய்துள்ளதாகவும் இது தொடர்பான தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று (02) மாலை கையளித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளிட்டுள்ளமையை ஆளுநர் முற்றாக நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதியை நான் நேற்று (02) மாலை சந்தித்தபோது, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினேன்.

இந்த நிலையில் என்னை ஆளுநர் பதவியிலிருந்து தான் நீக்கப் போவதும் இல்லை. இராஜினாமாச் செய்யுமாறு கேட்கப் போவதும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் தெரிவித்து, நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நீங்களாகவே முடிவெடுங்கள் என்றும் கூறினார்.

இதேவேளை, இன்று (03) இது தொடர்பில் கூடி ஆராய்ந்து நாங்கள் முடிவு எடுக்கவுள்ளோம்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகள் உட்பட பலரும் என்னைப் பதவி விலகுமாறு அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றர் என்றும் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

(ஏ. எச்.சித்தீக் காரியப்பர்,  Metro News)

No comments:

Post a Comment