குழப்பத்தை உண்டாக்கும் ஊடகங்களிடம் கேள்வி கேட்க வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 2, 2019

குழப்பத்தை உண்டாக்கும் ஊடகங்களிடம் கேள்வி கேட்க வேண்டும்

இணையத்தில் செய்திகள் வெளியிடப்பட்டது...
கொழும்பு ஊடகம் தெறிவித்தது...
என்றெல்லாம் உறுதி செய்யப்படாத பொய்யான செய்திகளையும், இட்டுக்கட்டிய தகவல்களையும் முஸ்லிம் சமூகத்திற்கும், முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் எதிராக பதிவிடும் இனவாத ஊடகங்களை கண்டிக்கிறேன்.

ஊடகங்கள் என்பது ஒரு நாட்டின், ஒரு சமூகத்தின் மிகப்பெரிய வளமும் தளமுமாகும், மக்கள் ஊடகங்கள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் இன்று ஒரு ஊடகங்கள் ஊடக தர்மத்தையும், தார்மீக பொறுப்புக்களையும் மீறி அதிகமான வாசகர்களை பெற வேண்டும், அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் என்ற பேராசையில் இனவாதத்தை காரி உமிழக்கூடிய பல்லின மக்களுக்கு மத்தியில் காணப்படும் சமாதானத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுவதால் எல்லா ஊடகங்களையும் பொதுமக்கள் சந்தேகத்தோடும் வெறுப்போடும் நோக்குகின்ற நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறது.

ஒரு ஊடகவியலாளரின் பணி என்பது சாதாரணமான ஒன்றல்ல இனம், மதம், மொழி, அரசியல் என்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை தாண்டி பொது மக்களின் (வாசகர்களின்) நம்பிக்கையை பாதுகாப்பதற்காக பல இன்னல்கள், துன்பங்கள், வலிகள், அவமானங்கள், அச்சுறுத்தல்களை தாண்டியும் அனுபவித்தும் உண்மையை நேர்மையாகவும் தைரியமாகவும் சொல்பவனே உண்மையான ஊடகவியலாளன், சில ஊடகவியலாளர்கள் எந்த ஊதியமும் கொடுப்பனவுகளும் பெறாமல் சமூகத்திற்கு சேவையாக கருதி இப் பணிகளை முன்னெடுக்கிறார்கள்.

ஆனால் "கம்பு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன்" என்பது போல முகனூலில் நான்கு வரி எழுதுகின்றவனும், வட்சப்பில் பதிவு போடுபவனும் செய்தி எழுத துவங்கிவிட்டார்கள் இவர்களின் ஊடக ஆர்வத்தை பாராட்டிய ஆக வேண்டும், இவர்களின் ஊடக ஆர்வத்தை பயண்படுத்தி சில இனவாத இணையதளங்கள் பிழையாக வழி நடாத்தி ஊடக தர்மத்தை பற்றி துளியும் தெறியாத ஊடகவியாளர்களாக மாற்றுவதே இந்த ஊடகங்களுக்கு வந்த சோதனை. 

வாசகர்கள் தெளிவாக இருக்க வேண்டும் எந்த ஊடகம் எந்த வகையான செயற்பாட்டை கொண்டுள்ளது என பிரித்தரிந்து ஊடக தர்மத்தை மீறும் இனவாத ஊடகங்களை புறக்கணிக்க வேண்டும். அதே சமயம் போலியான செய்திகளை எழுதி குழப்பத்தை உண்டாக்கும் ஊடகங்களிடம் கேள்வி கேட்க்க வேண்டும்.

ஊடகமும், அரசாங்கமும் மக்களுக்காகவே அன்றி மக்கள் அவைகளுக்காக அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

அரசாங்க நமக்கு கருத்து சுதந்திரத்தை தந்துள்ளது தகவல்களை அறிந்து கொள்ள வாய்ப்புகள் தந்துள்ளது அவைகளை உரியநேரத்தில் உரிய இடத்தில் பயண்படுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்..

எம்.பஹ்த் ஜுனைட்
ஊடகவியலாளர்

No comments:

Post a Comment