ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணைகள் ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பார்க்கக்கூடிய வகையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுவதையிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் டிரான்ஸ்பரன்சி இன்டர்நெசனல் ஸ்ரீலங்கா என்ற அமைப்பு வரவேற்றுள்ளது.
இதுபோன்ற அனைத்து விசாரணைகளும் இவ்வாறு பொதுமக்களுக்கு ஊடகங்கள் தொலைக்காட்சிகள் மூலம் காட்டப்படவேண்டும்.
பொது மக்களின் ஆவணத்துக்கு உட்படுத்தப்படுவதன் மூலமே இலங்கையில் வெளிப்படைத் தன்மை உறுதிப்படுத்தப்படும் என்று மேற்படி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அசோக் ஒபேசேகர கூறுகிறார்.
விசேட சந்தர்ப்பங்கள் தவிர மற்றைய நேரங்களில் அவ்வாறான விசாரணைகள் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
மேற்படி பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முதலாவது அமர்வில் தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் சிசிர மென்டிஸ் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் (ஓய்வுபெற்ற) சாந்த கோட்டேகொட ஆகியோரை தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர். இது தொலைக்காட்சி மூலம் பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பார்வையிடும் வகையில் ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment