அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தற்காலிகமாக அமைச்சுப் பதவியைத் துறக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
அலரி மாளிகைக்கு அமைச்சர் ரிஷாத்தை அழைத்து, பிரதமர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார் என்று அறியமுடிகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி அத்துரலிய ரத்தன தேரர் ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக நேற்றிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதுடில்லியிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அலைபேசியில் உரையாடியுள்ளார் என அறியமுடிகின்றது.
அமைச்சர் ரிஷாத் பதியுதீனை தற்காலிகமாகப் பதவி விலகுமாறு அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால, அமைச்சர் ரிஷாத்துடனும் நேரடியாக அலைபேசியூடாகப் பேசியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
இதன் பின்னர் அலரி மாளிகைக்கு ரிஷாத்தை அழைத்த பிரதமர், தற்காலிகமாக அமைச்சுப் பதவியைத் துறக்குமாறு கோரியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Charles Ariyakumar Jaseeharan

No comments:
Post a Comment