அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அஸாத் ஸாலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோரை உடனடியாகப் பதவியிலிருந்து விலக்க வேண்டும் எனக் கோரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் உடல்நிலை மோசமடைந்து வருகின்றது என அவரை இன்று பரிசோதித்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாவட்டப் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் பலர் ரத்தன தேரரை இன்று நேரில் பார்வையிட்டு உரையாடியுள்ளனர்.
இதேவேளை, நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை வர்த்தகர்கள் இன்று மூடியுள்ளனர்.
அத்துரலிய ரத்தன தேரருக்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment