தலதா மாளிகைக்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அத்துர்லியே ரத்தின தேரர் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு மல்வது மற்றும் அஸ்கிரி பீடங்களில் பீடாதிபதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
தீவிரவாதிகளுக்கு ஆதரவு வழங்கியதாக முஸ்லிம் அமைச்சர் உள்ளிட்ட ஆளுநர்கள் இருவரைப் பதவி விளக்குமாறு கோரி இன்றுடன் நான்காவது நாளாக அத்துர்லியே ரத்தின தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விவகாரம் நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளதால், இந்த புனித பூமியின் கௌரவத்தை மதித்து, புனிதத்துவத்தை பாதுகாத்து உடனடியாக தீர்வொன்றை வழங்குமாறு குறித்த கடித்தல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment